இரு துருவம் சீசன் 2: நாளை வெளியாகிறது
ADDED : 953 days ago
2019ம் ஆண்டு சோனி லிவ் தளத்தில் வெளியான தமிழ் வெப் சீரிஸ் ‛இரு துருவம்'. இதில் நந்தா, அப்துல், செபாஸ்டின் ஆண்டனி, அபிராமி வெங்கடாசலம் நடித்திருந்தார்கள். எம்.குமரன் இயக்கி இருந்தார். இது சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லராக வெளிவந்தது.
தற்போது இதன் இரண்டாவது சீசன் தயாராகி உள்ளது. அது நாளை முதல் (பிப்.24) சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. இந்த சீசனை அருண் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். நந்தா, பிரசன்னா, அபிராமி வெங்கடாசலம், லிங்கா, சாய் பிரியங்கா ரூத் மற்றும் அப்துல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் சீசனில் போலீஸ் அதிகாரி விக்டராக நடித்த நந்தா இந்த சீசனிலும் தொடர்கிறார். அவர் மோதப்போவது பிரசன்னாவுடன். நகரில் நடக்கும் விதவிதமான கொலைகள், காணாமல் போகும் நந்தாவின் மனைவி இவற்றை கொண்டு இந்த சீசனின் கதை சுழல இருக்கிறது.