மாயத்தோட்டா : சின்னத்திரை பிரபலங்கள் ஒன்றிணையும் த்ரில்லர் வெப்சீரிஸ்
ADDED : 1012 days ago
சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்து வருகிறது. அதிலும் சிலர் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்/நடிகைகளாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில் அண்மையில் சைத்ரா ரெட்டி 'வலிமை' படத்திலும், குமரன் தங்கராஜன் 'வதந்தி' வெப்சீரிஸிலும் என்ட்ரியாகி நடித்திருந்தனர். தற்போது, ஹங்கமா-ப்ளே ஓடிடி தளத்திற்காக விரைவில் வெளியாகவுள்ள 'மாயத்தோட்டா' என்கிற வெப்சீரிஸில் சைத்ரா ரெட்டி, குமரன் தங்கராஜன், அமீத் பார்கவ், வைஷாலி தனிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் அனைவரும் தனித்தனியாக படங்களில் கமிட்டாகி நடித்திருந்தாலும், ஒரே வெப்சீரிஸில் ஒன்றாக கமிட்டாகி இருப்பது இதுவே முதல்முறை. தனது மனம் கவர்ந்த சின்னத்திரை நட்சத்திரங்களை ஒரே ப்ரேமில் பார்க்கப்போவதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.