4 விருதுகள் வென்ற 'கேங்'
ADDED : 950 days ago
இயக்குனர் 'சாட்டை' அன்பழகனிடம் உதவியாளராக இருந்த தீனதயாளன் இயக்கி உள்ள படம் 'கேங்'. இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகர் குணா ஹீரோவாக நடித்துள்ளார், இவர் தீரன், இரும்புத்திரை, கே.டி, காளி, தமிழ் படம் 2, ஹீரோ, விக்ரம் சமீபத்தில் வெளியான தக்ஸ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த தாமினி தேவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். டோனி பிரிட்டோ இசை அமைக்கிறார், பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். “கேங் ரேப்பில் ஈடுபடும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் அவர்களிடமிருந்து புத்திசாலித்தனமாக எப்படி தப்பிக்கிறார் என்பது படத்தின் கதை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் தீவிரம் பற்றி பேசும் படம்” என்கிறார் இயக்குனர் தீனதயாளன். இத்திரைப்படம் நான்கு சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.