"எங்கு போய் நட்பை தேடுவேன்" - செல்வராகவன் வேதனை பதிவு..
ADDED : 952 days ago
இயக்குனர் செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். கதாநாயகனாகவும் செல்வராகவன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தனுஷ் நடித்த வாத்தி படம் வெளியான அதே தேதியில் ரிலீஸானது.
இந்நிலையில் சமூகவலைதள பக்கத்தில் அவ்வப்போது தத்துவங்களை உதிர்த்து வரும் செல்வராகவன் இப்போது வேதனையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் என கூறியுள்ளார்.