அரண்மனை 4ல் இரு நாயகிகள்
ADDED : 1050 days ago
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4 பாகத்தை உருவாக்க உள்ளார். கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு வெளியேறினார். தற்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரண்மனை 4ம் பாகம் இரு கதாநாயகிகளை கொண்டுள்ள கதைக்களமாக இருப்பதால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே அரண்மனை 3 படத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.