மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
921 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
921 days ago
தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பல ஹீரோக்கள் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறு சில தொழில் முதலீடுகளையும் செய்து வருகிறார்கள். பிரபல முன்னணி நடிகரான மகேஷ்பாபு, ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏற்கெனவே ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற 7 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.
அடுத்ததாக ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் டிரைவன் இன் தியேட்டர் ஒன்றை நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோருடன் இணைந்து ஆரம்பிக்க உள்ளாராம். பிரபல தயாரிப்பாளர் சுனில் நரங் அவர்களும் இதில் இணைகிறாராம். இது குறித்து அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் தகவல்.
அந்த டிரைவ் இன் தியேட்டருக்கு 'எஎம்பி கிளாசிக்' எனப் பெயர் வைக்க உள்ளார்களாம். அழகான வடிவமைப்புடன் உருவாக உள்ள இந்தத் தியேட்டரை இந்த வருடத்திற்குள் திறக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
சென்னையில் இதற்கு முன்பு பிரார்த்தனா என்ற ஒரே ஒரு டிரைவ் இன் தியேட்டர் இருந்தது. அதை தற்போது மூடி விட்டார்கள். அதே சமயம், திருச்சியில் தற்போது மூர்த்திஸ் டிரைவன் இன் என்ற தியேட்டர் கடந்த வருடம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சென்னையில் ஒரு டிரைவ் இன் தியேட்டர் கூட இல்லாதது சினிமா ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.
921 days ago
921 days ago