மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
921 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
921 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பாகமதி, சைலன்ஸ்' என இரண்டே படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிக்க உள்ள படம் பற்றி நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
பிரபாஸ் குடும்பத்தினருக்குச் சொந்தமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத தயாரிக்கிறது. மகேஷ்பாபு இயக்கும் இந்தப் படத்திற்கு 'மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி' என பெயர் வைத்துள்ளார்கள். அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க, நவின் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.
லண்டனில் வசிக்கும் அனுஷ்காவுக்கும், ஐதராபாத்தில் வசிக்கும் நவினுக்கும் இடையிலான நகைச்சுவை கலந்த படமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்களாம். இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
921 days ago
921 days ago