உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காயங்கள் எனக்கு ஆபரணங்கள் : மீண்டும் அதிரடியில் இறங்கிய சமந்தா

காயங்கள் எனக்கு ஆபரணங்கள் : மீண்டும் அதிரடியில் இறங்கிய சமந்தா

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டில் தயாராகும் தொடர். அங்கு பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தியன் வெர்ஷனில் சமந்தா நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் உள்ளன.

இந்த தொடருக்காக குதிரையேற்ற பயிற்சி செய்த சமந்தா. சண்டை பயிற்சியும் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சண்டை காட்சியின்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. அந்த படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமந்தா “இதையெல்லாம் பார்த்து நான் அஞ்சப்போவது இல்லை.. எனது கையில் ஏற்பட்டுள்ள காயங்களை நான் ஆபரணமாக கருதுகிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

ஏற்கெனவே 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் அதிரடி சண்டை காட்சியில் நடித்திருந்த சமந்தா. சமீபத்தில் வெளிவந்த 'யசோதா' படத்திலும் சண்டை காட்சிகளில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் தனது அதிரடி ஆக்ஷனை தொடங்கி இருக்கிறார். அடுத்து குஷி படத்திலும் நடிக்க உள்ளார். இவர் நடித்துள்ள சாகுந்தலம் படம் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !