உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அகிலன் படத்துக்கு யுஏ சான்று

அகிலன் படத்துக்கு யுஏ சான்று

பூலோகம் படத்தை அடுத்து கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் அகிலன். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. சாம் சி .எஸ் இசையமைத்துள்ள இந்த அகிலன் படத்தின் டிரைலர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அகிலன் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இது குறித்த தகவலை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !