கப்பலில் அகிலன் பட புரோமஷன்?
ADDED : 952 days ago
கல்யாண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அகிலன். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாவதையொட்டி புதுப் புது ஐடியாக்களில் புரொமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் புரொமோஷன் பிரஸ் மீட்டை நடுக்கடலில் நடத்த ஒரு கப்பல் வாடகைக்குப் பேசப்பட்டிருக்குதாம். இதனையடுத்து நாடெங்கும் உள்ள ஹார்பர் பக்கம் அகிலன் படம் ஏகப்பட்ட கட்டுமரங்கள் மூலம் புரொமோஷன் செய்வது, கல்லூரி மாணவர்களுடன் ஹார்பரில் ஒரு ஈவ்னிங் மீட் செய்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை பகிர்வது என்று ஏகப்பட்ட திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.