உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் 'கடுவா': இன்று வெளியானது

தமிழில் 'கடுவா': இன்று வெளியானது

9 வருடங்களுக்கு பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கிய மலையாள படம் 'கடுவா'. இதில் பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், பிரியங்கா நாயர், ராகுல் மாதவ், அர்ஜுன் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிருத்விராஜ் நடித்திருந்த பக்கா ஹீரோயிச ஆக்ஷன் படம். கடுவா என்கிற தாதாவுக்கும், போலீஸ் அதிகாரி விவேக் ஓபராய்கும் உள்ள ஈகோ மோதல்தான் படத்தின் கதை. பிருத்விராஜ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தியேட்டரில் வெளியான இந்த படம் பிறகு ஓடிடி தளத்திலும் வெளியானது. தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தற்போது தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 15 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !