தனுஷ் படத்தை பாராட்டிய பாலகிருஷ்ணா
ADDED : 950 days ago
தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. சமீபத்தில் இப்படம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் 95 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள் . இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா இப்படத்தை பார்த்து இயக்குனர் வெங்கி அட்லூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.