அகிலன் சென்சாரில் நீக்கப்பட்ட 2 நிமிட காட்சிகள்...
                                ADDED :  970 days ago     
                            
                            இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அகிலன். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. துறைமுகம் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது. தற்போது இப்படத்தை படக்குழுவினர் சென்சாருக்கு அனுப்பியுள்ளார்கள். அதில் இரண்டு நிமிட காட்சிகளை சென்சார் குழு நீக்கியுள்ளதாம். இந்த நீக்கப்பட்ட காட்சிகளில் சில அரசியல் வசனம், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அடங்கியுள்ளன என கூறப்படுகிறது.