உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் - கார்த்தி படங்கள்

மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் - கார்த்தி படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். அதேப்போல் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தியும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாவீரன் படமும் , ஜப்பான் படமும் ஜுன் 29 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர்களின் தம்பி - ஹீரோ படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின. கடந்தாண்டு தீபாவளிக்கு சர்தார் - பிரின்ஸ் மோதியது. இதில் சர்தார் வெற்றி பெற்றது. பிரின்ஸ் தோல்வி அடைந்தது. இப்போது மாவீரன் - ஜப்பான் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கார்த்தியும், சிவகார்த்திகேயனும் மோதுகின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !