வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம்
ADDED : 936 days ago
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற குறுநாவலை தழுவி உருவாக உள்ள இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக காளைகளுடன் பயிற்சி எடுக்கும் ஒத்திகை காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது.
'வாடிவாசல்' கிராபிக்ஸ் பணிகளுக்காக அவதார் படத்திற்கு பணியாற்றிய வீடா டிஜிட்டல் நிறுவனம் பணியாற்றவுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக சூர்யா வாரத்திற்கு ஒருமுறை இரண்டு காளைகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.