உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாமன்னன் ரிலீஸ் எப்போது?

மாமன்னன் ரிலீஸ் எப்போது?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !