'அருவி' சீரியல் இயக்குநர் நடிகைகளுடன் குத்தாட்டம்
ADDED : 950 days ago
'அருவி' சீரியலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் அம்பிகா, ஜோவிதா லிவிங்க்ஸ்டன், கார்த்திக் வாசுதேவன் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரை தற்போது ராமசந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். அருவி தொடரின் இயக்குநரை இதுவரை பொதுவெளியில் பலரும் பார்த்ததில்லை. தற்போது அவர் சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஆடியுள்ளார். ஜோவிதா லிவிங்க்ஸ்டனும், ஜீவிதாவும் 'காக்கிநாடா கட்டை' பாடலுக்கு செமயாக குத்தாட்டம் போட அதற்கு ராமசந்திரன் க்யூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளார். அதை பார்த்துவிட்டு இவர் தான் அருவி சீரியலின் இயக்குநரா? என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.