பிரபல டான்ஸ் மாஸ்டர் இயக்கத்தில் கவின்
ADDED : 938 days ago
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கவின். ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் டாடா. கவினுக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்தார். பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து. தற்போது கவின் தனது அடுத்த படத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த படத்தை பிரபல நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கவுள்ளராம். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.