பேட்டகாளியை கோயிலுக்கு வழங்கிய இயக்குனர்
ADDED : 943 days ago
வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கிய வெப் தொடர் 'பேட்டகாளி'. இது ஜல்லிக்கட்டை மையப்படுத்திய தொடர். இதில் தொடரின் நாயகி ஷீலா ராஜ்குமார் வளர்க்கும் காளி என்ற காளைதான் கதையின் மையம். இந்த வலைத்தொடரில், கிஷோர், வேல ராமமூர்த்தி, கலையரசன், ஆண்டனி, நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார்.
இந்த படத்தில் நடித்த காளி என்ற காளையை இயக்குனர் ராஜ்குமார் வளர்த்து வந்தார். தற்போது அதனை படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவகமூர்த்தியார் கோயிலுக்கு தானமாக வழங்கி விட்டார். இனி ஆண்டுதோறும் காளி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்.