திருச்செந்தூரில் விமல் சாமி தரிசனம்
ADDED : 937 days ago
நடிகர் விமல் தனது மனைவி பிரியதர்ஷினி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் தரிசனம் நீண்ட நாள் கனவு. அதனால் குடும்பத்துடன் வந்தேன். எனது சினிமா கேரியர் சீராக போய்கொண்டிருக்கிறது. மா.பொ.சி படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து முழுநீள காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை தேடி நடிக்கிறேன். விலங்கு வெப் தொடர் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.
விமலுக்கு உள்ள பைனான்ஸ் பிரச்னை, வழக்கு இதுகுறித்த கேள்விகளுக்கு “எல்லாவற்றையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்” என்று பதிலளித்து சென்றார்.