லோகேஷ் கனகராஜ் பாணியை பின்பற்றும் பிரசாந்த் நீல்
ADDED : 937 days ago
தமிழில் கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய கைதி படத்தின் டெல்லி கேரக்டரை கமலை வைத்து இயக்கிய விக்ரம் படத்தில் கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து விஜய் நடிப்பில் அவர் இயக்கி வரும் லியோ படத்திலும் மாஸ்டர், விக்ரம், கைதி போன்ற படங்களின் கேரக்டர்கள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோகேஷின் இந்த எல்சியு பாணியை தற்போது பிரபாஸ் நடிப்பில் தான் இயக்கி வரும் சலார் படத்தில் பின்பற்றுகிறாராம் பிரசாந்த் நீல். ஏற்கனவே தான் இயக்கிய கேஜிஎப் படத்தில் யஷ் நடித்த ராக்கி பாய் கேரக்டரை இந்த சலார் படத்தில் கொண்டு வருகிறாராம்.
இதுவரை இந்த படத்தில் யஷ் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் கேரக்டரையே இந்த படத்திற்குள் அவர் கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.