கவர்ச்சி ரூட்டிற்கு மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்
ADDED : 984 days ago
சாவித்ரி வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அடுத்த சாவித்ரி என திரையுலகில் பெயர் எடுத்தவர். சமீபகாலமாக கதையின் நாயகியாக அவர் நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் கமர்ஷியல் ரூட்டிற்கு மாறி வருபவர் தற்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக சற்றே கவர்ச்சி ரூட்டிற்கு இவர் மாறி வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றையும் எடுத்து, 'தைரியமாக பூக்கும்' என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். இதனால் கீர்த்தி ரூட்டை மாற்றிவிட்டாரா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.