'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பத்து தல'. இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு சனிக்கிழமை இரவு யு-டியுபில் வெளியிடப்பட்டது.
இரண்டு வாரம் முன்பு வெளியான 'பத்து தல' டீசர் 12 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்ற நிலையில் இப்போது டிரைலருக்கு அதை விட அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.