இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர்
ADDED : 932 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் அவர் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கிஷோர். அதோடு பெங்களூரில் தான் இயற்கை விவசாயம் செய்து விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவர் கடைகளை நடத்தி வருகிறார். தற்போது தனது மனைவி, மகன்களுடன் இயற்கை விவசாயத்தில் கிஷோர் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.