உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இது எப்டி இருக்கு - ரஜினியை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்

இது எப்டி இருக்கு - ரஜினியை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்

சில நாட்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் காலேவின் அழைப்பை ஏற்று, ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்தார்.

இந்த தகவல் வைரலானது. ஆனால் வெளியில் தெரியாத இன்னொரு தகவலும் உண்டு. அது இளம் கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது தான். தற்போது அந்த படங்களை வெளியிட்டிருப்பதால் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரஜினியை சந்தித்துள்ளனர். ரஜினியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தலைவர் என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.

இதேபோல், வாஷிங்டன் சுந்தர், இன்ஸ்டாகிராமில் அவர் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இது எப்டி இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !