உண்மையாகவே மது அருந்தினாரா நானி
ADDED : 932 days ago
ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தசரா. இதில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் நடிகர் நானி ஒரு நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், ‛‛இந்த படத்தின் உண்மை தன்மைக்காக மது அருந்தும் காட்சிகளுக்கு உண்மையான மது பானத்தை அருந்துமாறு இயக்குனர் கேட்டுக்கொண்டார். அதனால் மது அருந்தி நடித்தேன் என நானி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.