லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்?
ADDED : 935 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சயத் தத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லலித் தயாரிக்க, அனிரூத் இசையமைக்கிறார். காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
இந்நிலையில் யு-டியூப்பர் இர்பான், இயக்குனர் லோகேஷ் கனகராஜை காஷ்மீரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் அவர் இணைந்து நடிக்கிறாரா என கேள்விகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால் இர்பானோ, தனது இன்ஸ்டாவில் இயக்குனர் லோகேஷை காஷ்மீர் பயணத்தின் போது சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.