ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம்
ADDED : 935 days ago
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இதுதவிர அஹமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இதற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.