கொச்சி சென்றார் ரஜினி : ‛ஜெயிலர்' இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பு
ADDED : 938 days ago
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் 'ஜெயிலர்'. இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். நெல்சன் இயக்குகிறார்.
சென்னை, ஐதராபாத், மும்பையில் நடந்து வந்து இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் கொச்சியில் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் ஏற்கெனவே கொச்சி சென்று விட்ட நிலையில், ரஜினி நேற்று கொச்சி சென்றார்.
ரஜினி வருவதை அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டு ரஜினிக்கு வரவேற்பு கொடுத்ததோடு, அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். ரஜினி ஒரு வாரம் வரை கொச்சியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.