பிச்சைக்காரன் 2 படம் தள்ளி போகிறதா?
ADDED : 959 days ago
2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைகாரன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அவரே இயக்கியும் உள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
சமீபத்தில் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி அன்று வெளியாகும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களும் வெளியாக உள்ளன. இதனால் விஜய் ஆண்டனி இந்த படத்தை எந்த போட்டியும் இல்லாமல் தனியாக வெளியாக வேண்டும் என மே மாதத்தில் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.