மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
923 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
923 days ago
நீலகிரி : நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில், குட்டியானைகள் அதன் பாகன்கள் இடையேயான பாசப்பிணைப்பை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கனசால்வஸ் என்பவர், எடுத்த ஆவண படத்துக்கு, சிறந்த ஆவண படத்திற்கான 'ஆஸ்கார்' விருது கிடைத்தது.
இதில், இடம் பெற்றிருந்த, முதுமலை யானை பாகன் பொம்மன் அவர் மனைவி பெல்லியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'ஆஸ்கார்' விருது பெற்ற பின், மும்பை வந்த இயக்குனர் கார்த்திகி, முதுமலை யானை பாகன் தம்பதிகள் பொம்மன் - பெல்லியை மும்பைக்கு அழைத்தார். மும்பையில், அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர், 'ஆஸ்கார்' விருதை கையில் கொடுத்து பாராட்டினார்.
யானை பாகன் தம்பதிகள் பொம்மன் - பெல்லி கூறுகையில், 'எங்களுக்கு கிடைத்துள்ள இந்த புகழ், படத்தின் இயக்குனரையே சேரும். இயக்குனர் எங்களை மும்பைக்கு அழைத்து, 'ஆஸ்கார்' விருதை கையில் கொடுத்ததும், 'வெயிட்டான' விருதை நீண்ட நேரம் கையில் வைத்திருந்தது, 'வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களாக அமைந்துள்ளது. இன்று (மார் 23) இரவு மும்பையில் நடைபெறும் பாராட்டு விழாவுக்கு எங்களை அழைத்துள்ளனர்' என்றனர்.
923 days ago
923 days ago