'தீராக் காதல்'-ல் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் - ஷிவதா
ADDED : 929 days ago
இந்தியன் 2, பொன்னியின் செல்வன்- 2, லால் சலாம் ஆகிய படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், அஜித்தின் 62வது படத்தையும் தயாரிக்கப்போகிறது. இந்த படங்களுடன் சிறிய ரக பட்ஜெட் படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. அந்தவகையில் ஜெய் நாயகனாக நடிக்கும் 'தீராக் காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவிதா ஆகியோர் ஹீரோயினிகளாக நடிக்க, ‛அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீல மேகம் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்டிக் கதையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.