கதையின் நாயகியான வீரப்பனின் மகள்
ADDED : 938 days ago
மாவீரன் பிள்ளை படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிறார் வீரப்பனின் மகள் விஜயலெட்சுமி. இந்த படத்தின் இசை வெளியீடு விழாவில் சிறப்பு விருந்தினராக வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் பேரரசு, நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய விஜயலெட்சுமி “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.