உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தசரா படத்திற்கு 36 இடங்களில் கட் கொடுத்த சென்சார் அதிகாரிகள்

தசரா படத்திற்கு 36 இடங்களில் கட் கொடுத்த சென்சார் அதிகாரிகள்

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தசரா. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம்,கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இப்போது எல்லா மாநிலத்திலும் பிஸியாக விளம்பரம் படுத்தி வருகிறார்கள் நானி மற்றும் படக்குழுவினர்கள்.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் ரிப்போர்டில் U/A சான்றிதழ் பெற்றது. தணிக்கை குழு படத்தில் சுமாராக 36 கட் (Cut) செய்துள்ளார்கள். இதுவே தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக முன்னணி நடிகர் ஒருவரின் படத்திற்கு அதிக சென்சார் கட் செய்த படம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !