மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு
ADDED : 923 days ago
கேப்டன் படத்திற்கு பின் முத்தையா இயக்கி வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இதானி நடிக்கிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்த படத்தின் டீசர் மார்ச் 31ம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி, கேப்டன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.