நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1033 days ago
சென்னை: தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் துணை பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் சரத்பாபு, 71. மறைந்த கே.பாலச்சந்தர் இயக்கிய, பட்டின பிரவேசம் படம் வாயிலாக தமிழில் 1977ல் அறிமுகம் ஆனார். அண்ணாமலை, முத்து உட்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமண வாழ்க்கையில் சோகத்தை தழுவிய இவர், சினிமாவை விட்டு விலகி, ஐதராபாதில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.