அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி
ADDED : 922 days ago
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை கண்காட்சி சென்னையில் நடந்தது. இதனை கமல் தொடங்கி வைத்தார், ரஜினி சென்று பார்த்தார். தற்போது இந்த கண்காட்சி மதுரையில் நடக்கிறது. அந்த பகுதியில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி இதனை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: முதல்வரின் 70 ஆண்டுகால வாழ்க்கையை இந்த கண்காட்சியில் பார்த்தேன். இன்றைய இளைஞர்கள் இதை பார்த்தால் முதல்வரை பற்றிய புரிதல் ஏற்படும். அவர் வாரிசு காரணமாக முதல்வராகவில்லை. கடும் உழைப்பால் முதல்வரானார் என்பது தெரியும். இன்றைய இளைஞர்கள் அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் அரசியல் பற்றி தெரியும். ஆனால் நேரடி அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.