விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன்
ADDED : 918 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை' . நேற்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பே வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் விடுதலை படத்தில் பணிபுரிந்த அத்தனை நபர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக இன்று வெற்றிமாறன் வழங்கியுள்ளார். தொடர்ந்து வெற்றிமாறன் செய்யும் நற்செயல்களால் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.