பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது
ADDED : 919 days ago
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, சில பிரச்சினைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி வில்லன் நடித்து வருகிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கும் வணங்கான் படக்குழு, அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வழக்கத்தை விட வேகமாக நடத்தி முடித்து படத்தை வெளியிடுவதற்கு இயக்குனர் பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.