முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்
ADDED : 919 days ago
நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்தபடியாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரஜினி கலந்து கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் சவுந்தர்யா ரஜினி. அதில் கருப்பு நிற உடையில் ஸ்டைலிசான கெட்டப்பில் தோன்றுகிறார் ரஜினிகாந்த்.