வசூல் சாதனையில் நானியின் தசரா
ADDED : 923 days ago
நடிகர் நானி நடிப்பில் உருவாகி சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தசரா. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் மூன்று நாட்களில் ரூ.71 கோடி வசூல் ஈட்டியுள்ளது என இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.