உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினேன்: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினேன்: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி துவங்கியிருக்கும் புதிய கலாச்சார மையத்தின் துவக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவரும் பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் மற்றும் மகள் மால்டி மேரி உடன் பங்கேற்றார்.

நிகழ்ச்சி குறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: இசை நிகழ்ச்சியில் நமது தேசத்தின் முகத்தைப் பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பெருமிதத்தால் சில கண்ணீர் சிந்தியிருக்கலாம். நமது தேசத்தின் வரலாறு மிகவும் பிரமிக்க வைக்கிறது. உங்களின் அயராத பங்களிப்பு மற்றும் கலைக்கான அர்ப்பணிப்புக்காக நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !