மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
889 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
889 days ago
2023ம் ஆண்டில் மார்ச் மாதம் வரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 50ஐ நெருங்கி உள்ளது. மார்ச் மாதம் 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடந்தாலும் வாராவாரம் நான்கு படங்களாவது வெளியாகின.
அடுத்து 10ம் வகுப்புகளுக்கான தேர்வும், மற்ற வகுப்புகளுக்கான தேர்வும் இந்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளன. இருந்தாலும் இந்த மாதத்திலும் வாராவாரம் நான்கைந்து படங்களாவது வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த வாரம் ஏப்ரல் 7ம் தேதி, “ஆகஸ்ட் 16 1947, எவன், இது கதையல்ல நிஜம், கருங்காப்பியம், முந்திரிக்காடு, ரேசர், தலைக்கவசமும் 4 நண்பர்களும்” என ஏழு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் '1947' மற்றும் ‛கருங்காப்பியம்' படங்கள் மட்டும்தான் ரசிகர்களுக்குத் தெரிந்த படமாக உள்ளது. 1947ல் கதாநாயகனான கவுதம் கார்த்தி நடித்துள்ளார். ‛கருங்காப்பியம்' படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற படங்களைப் பற்றி கூகுளில் கூட அதிகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவற்றின் வெளியீட்டு போஸ்டர்கள் மட்டும் கடந்த வாரம் வெளியாகி உள்ளது. இவற்றில் கடைசி நேரத்தில் எது வரும், எது வராமல் போகும் என்பதும் தெரியாது.
889 days ago
889 days ago