உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொய்ச் செய்திக்கு பதிலடி கொடுத்த சமந்தா

பொய்ச் செய்திக்கு பதிலடி கொடுத்த சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, அவருடைய முதல் தெலுங்குப் பட கதாநாயகனான நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் பின்னர் பிரிந்தனர்.

பிரிவுக்குப் பின்னரும் சில தெலுங்கு ஊடகங்கள் அவர்களைப் பற்றிய வதந்திகள், பொய்ச் செய்திகள் ஆகியவற்றை பரப்பி வருகின்றன. ஒரு இணையதளம் ஒன்று சமந்தா சொன்னதாகச் சொல்லி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் சோபிதா துலிபலாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி, “யார் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை,” என சமந்தா சொன்னதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.

அந்த செய்தியைப் பகிர்ந்து, “ நான் எப்போதும் அப்படி சொன்னதில்லை,” என சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். சமந்தாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும், ரிடுவீட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !