ஜப்பானில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த ஆர்.ஆர்.ஆர் படம்!
ADDED : 945 days ago
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் பல சர்வதேச விருதுகளை வென்றதோடு நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது.
இந்நிலையில் இப்படம் ஜப்பானில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற பிறகு ஜப்பானில் இன்னும் அதிகமானோர் கவனத்தை ஈர்த்துள்ளதால் இந்த படத்தை காண அதித ஆர்வம் காட்டுவதால் இன்னும் தியேட்டர்களை அதிகப்படுத்தி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.