நடிகை குஷ்பு டிஸ்சார்ஜ்
ADDED : 921 days ago
ஐதராபாத்: நடிகையும், பா.ஜ., நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு காய்ச்சல், உடல்வலி காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளியன்று அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அப்போது கூறுகையில், ‛கடுமையான காய்ச்சல், உடல் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் உடல் உங்களிடம் ஏதாவது சொன்னால் தயவு செய்து அதை நிராகரிக்காதீர்கள். நான் விரைந்து குணமாகி வருகிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் உடல்நலம் சரியாகி குஷ்பு தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார். குஷ்பு கூறுகையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் அன்பிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.