உங்கள் மகிழ்ச்சியே எதிரிகளுக்கு தண்டனை : ஹாட் கிளிக்ஸ் உடன் தர்ஷா குப்தா தத்துவம்
ADDED : 917 days ago
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சினிமாவில் அடுத்தடுத்து சில படங்களில் வேகமாக கமிட்டானார். இதற்காக ஏற்கனவே நடித்து வந்த சீரியல்களிலிருந்தும் வெளியேறினார். தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான தர்ஷா குப்தா, அந்த மார்க்கெட்டை விட்டுக்கொடுக்காமல் தற்போது ஹாட் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கடற்கரை மணலில் விளையாடுவது போல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதற்கு கேப்ஷனாக ‛‛இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை'' என்று குறிப்பிட்டுள்ளார்.