உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹரிஷ் கல்யாண் படத்தின் முதல்பார்வையை வெளியிடும் தோனி

ஹரிஷ் கல்யாண் படத்தின் முதல்பார்வையை வெளியிடும் தோனி

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' எனும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் படமாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'எல்ஜிஎம்' என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். நாயகியாக இவானாவும், முக்கிய வேடங்களில் நதியா, யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் பார்வையை இன்று ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 7 மணிக்கு தோனி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !