உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஆதியுடன் இணைந்த அனகா

மீண்டும் ஆதியுடன் இணைந்த அனகா

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தற்போது வீரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து பி.டி சார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ஆதி. இந்நிலையில் புதிய படம் ஒன்றை ஆதி தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தில் வழக்கம் போல் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். ஆதிக்கு ஜோடியாக ‛நட்பே துணை' படத்தில் நடித்த அனகா நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !