உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜாக்குலினுக்கு மோசடி மன்னன் காதல் கடிதம்

ஜாக்குலினுக்கு மோசடி மன்னன் காதல் கடிதம்

பெங்களூரை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மும்பை திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தாக அவரது காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்ணாண்டசும் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இநத நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடியே ஈஸ்டர் வாழ்த்து சொல்லி காதல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் சுகேஷ்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் செல்லக் குழந்தை ஜாக்குலின். குட்டி முயலே... எனது பேபியே... உனக்கு எனது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள். உனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று என தெரியும். இந்த பூமியில் உன்னை விடவும் அழகி யாருமே கிடையாது. ஐ லவ் யூ பேபி.

இந்த நேரமும் கடந்து போகும். மீண்டும் நல்ல நாட்கள் வரும். ஒவ்வொரு கணமும் உன்னை மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு கணமும் நீயும் என்னை மிஸ் செய்வாய் என்று எனக்கு தெரியும். அடுத்த ஆண்டு ஈஸ்டர் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். என்று எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !